இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி வர்த்தக விசாரணை மற்றும் இறக்குமதி வரி உயர்வு அபாயம்

இந்தியா, சீனா மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட 16 நட்பு நாடுகளுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் அதிரடி வர்த்தக விசாரணையைத் தொடங்கியுள்ளது. 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்தார். அதிகப்படியான உற்பத்தி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மூலம் அமெரிக்க சந்தையைப் பாதிப்பதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தென் கொரியா போன்ற முக்கிய நாடுகளும் இந்த விசாரணைப் பட்டியலில் உள்ளன. இந்த நாடுகளின் உற்பத்தித் திறன் சர்வதேசத் தேவையை விட அதிகமாக இருப்பதாகவும், இது அமெரிக்க உள்நாட்டுத் தொழில்களைப் பாதிப்பதாகவும் வாஷிங்டன் கூறுகிறது. விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் இறக்குமதி வரி விதிக்கப்படும். அடுத்த 150 நாட்களுக்குள் இந்த விசாரணை முடிக்கப்பட்டு புதிய வரி கொள்கை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.