எரிவாயு தட்டுப்பாட்டால் கிடுகிடுவென உயரும் விறகு விலை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

எரிவாயு தட்டுப்பாட்டால் கிடுகிடுவென உயரும் விறகு விலை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் தற்போது விறகு பயன்பாட்டிற்கு மாறத் தொடங்கியுள்ளன. இதனால் சந்தையில் விறகுக்கான தேவை வழக்கத்தை விட பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இந்த திடீர் மாற்றம் எரிபொருள் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவை அதிகரித்துள்ளதால் ஒரு டன் விறகின் விலை பல ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் மரம் வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், விறகு தட்டுப்பாடு நீடித்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *