எம்ஜிஆரை இழிவுபடுத்திய ராஜேந்திர பிரசாத் விவகாரத்தில் நடிகர் விஷால் அதிரடி கோரிக்கை
March 12, 2026

மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் நடிகர் எம்ஜிஆர் குறித்து தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. நடிகர் காந்தாராவ் அவர்களின் வாள் சண்டை திறமையைக் கண்டு எம்ஜிஆர் பயந்து நடுங்குவார் என ராஜேந்திர பிரசாத் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இந்த கருத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஒருவரைப் பாராட்டுவதற்காக மற்றொரு மாபெரும் கலைஞரை இகழ்வது ஏற்புடையதல்ல என்றும், இதற்காக ராஜேந்திர பிரசாத் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக நடிகர் சங்கத் தலைவர் நாசரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.