அமெரிக்காவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரூ 27 லட்சம் கோடி மெகா முதலீடு மற்றும் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரவுன்ஸ்வில்லே துறைமுகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்டமான புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைய உள்ளது. ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங்’ என்ற இந்த மெகா திட்டத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 27 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலை ஆண்டுக்கு ஆறு கோடி பேரல்கள் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கப்பட உள்ளன. ஈரான் போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும் எரிபொருள் விலையைக் குறைக்கவும் இந்தத் திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.