எட்டு போர்களை தடுத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லை இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீது ட்ரம்ப் கடும் அதிருப்தி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பின் போது டொனால்ட் ட்ரம்ப் திடீரென இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு குறித்து பேசினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சுமார் எட்டு போர் போன்ற சூழல்களை தாம் தடுத்து நிறுத்தியதாக அவர் உரிமை கோரினார். வர்த்தக ரீதியான சலுகைகளை வழங்கியதன் மூலமே இது சாத்தியமானது என்றும், ஆனால் இதற்கான உரிய அங்கீகாரம் அல்லது ‘கிரெடிட்’ தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
அதே சமயம் ரஷ்யா-உக்ரைன் போரை ஒரே தொலைபேசி அழைப்பில் முடிவுக்கு கொண்டு வருவேன் என்று உறுதியளித்த ட்ரம்ப், தற்போது அந்த விவகாரத்தில் பெரும் சவால்களை சந்தித்து வருகிறார். புதின் மற்றும் ஜெலென்ஸ்கியை இணங்க வைக்க முடியாமல் அவர் திணறி வருவதாக கூறப்படுகிறது. இந்த நெருக்கடியை திசை திருப்பவே அவர் இந்தியா தொடர்பான பழைய விவகாரங்களை தற்போது கிளப்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நெதன்யாகு முன்னிலையில் ட்ரம்ப் வெளிப்படுத்திய இந்த ஆதங்கம் தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது.