இந்தியாவை நான்கு பக்கமும் சுற்றி வளைக்கிறதா சீனா? அண்டை நாடுகளில் ராணுவ தளம் அமைக்க ரகசிய திட்டம்

இந்தியாவை நான்கு பக்கமும் சுற்றி வளைக்கிறதா சீனா? அண்டை நாடுகளில் ராணுவ தளம் அமைக்க ரகசிய திட்டம்

அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் வெளியிட்டுள்ள ‘சீனாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள் 2025’ என்ற அறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தனது ராணுவத் தளங்களை அமைக்க சீனா தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜிபூட்டி மற்றும் கம்போடியாவில் தளங்களைக் கொண்டுள்ள சீனா, தற்போது இந்தியாவின் எல்லையோர நாடுகளில் கால்பதிப்பது தெற்காசியாவின் பாதுகாப்புச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் இந்த நடவடிக்கையானது அதன் கடற்படை மற்றும் விமானப்படையின் செயல்பாடுகளைத் தொலைதூரப் பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்கனவே நெருக்கமான உறவு இருக்கும் நிலையில், வங்கதேசம் மற்றும் மியான்மரில் சீனாவின் ராணுவ நடமாட்டம் இந்தியாவிற்குப் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையலாம். இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த சீனா முயல்கிறது. இந்த அறிக்கையை சீனா மறுத்தாலும், இந்தியாவைச் சுற்றி வளைக்கும் அதன் வியூகம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *