எக்ஸ் தளத்தில் பெண்களின் ஆபாச படங்களை உருவாக்கும் கிரோக் ஏஐ பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்

எக்ஸ் தளத்தில் பெண்களின் ஆபாச படங்களை உருவாக்கும் கிரோக் ஏஐ பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்

எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளத்தில் உள்ள ‘கிரோக் ஏஐ’ வசதியைப் பயன்படுத்தி பெண்களின் ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆபாசப் படங்களை உருவாக்கும் அதிர்ச்சியூட்டும் போக்கு அதிகரித்துள்ளது. போலி கணக்குகள் மூலம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களின் கண்ணியத்திற்கும் தனிப்பட்ட ரகசியத்திற்கும் குந்தகம் விளைவிக்கப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எக்ஸ் தளம் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், ஏஐ கருவிகளில் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு வரவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தொழில்நுட்ப முன்னேற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும், பெண்களைக் குறிவைக்கும் இத்தகைய செயல்கள் பொறுத்துக் கொள்ளப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *