அம்பானி மற்றும் மிட்டல் லாபத்தில் மிதக்க டாட்டா நிறுவனத்திற்கு சந்தையில் பெரும் சரிவு

அம்பானி மற்றும் மிட்டல் லாபத்தில் மிதக்க டாட்டா நிறுவனத்திற்கு சந்தையில் பெரும் சரிவு

2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 10 முன்னணி நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டியுள்ளன. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4.78 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், சுனில் மிட்டலின் ஏர்டெல் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சியுடன் அடுத்த இடத்திலும் உள்ளன. எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவையும் குறிப்பிடத்தக்க லாபத்தை பதிவு செய்துள்ளன.

இருப்பினும் தகவல் தொழில்நுட்ப துறையில் டாட்டா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது. டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 4.20 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் சந்தை மதிப்பை இழந்துள்ளன, இதில் டிசிஎஸ் மட்டும் 3.22 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது. எல்ஐசி நிறுவனமும் இந்த சரிவில் சிக்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *