உஷார் இந்த வலி நிவாரணி மாத்திரையை இனி பயன்படுத்த முடியாது மத்திய அரசு அதிரடி தடை

உஷார் இந்த வலி நிவாரணி மாத்திரையை இனி பயன்படுத்த முடியாது மத்திய அரசு அதிரடி தடை

பிரபலமான வலி நிவாரணி மருந்தான நைமுசுலைடு (Nimesulide) 100 மி.கி-க்கு மேல் பயன்படுத்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்த மருந்தின் அதிகப்படியான டோஸ் கல்லீரலை (Liver) கடுமையாக பாதிக்கும் என்பதால், இதன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில், பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவை அரசு எடுத்துள்ளது.

ஏற்கனவே 2011-ல் குழந்தைகளுக்கு இந்த மருந்து தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது பெரியவர்களுக்கான அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 500 கோடி ரூபாய் சந்தை மதிப்பைக் கொண்ட இந்த மருந்து, மருத்துவரின் பரிந்துரை இன்றி நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், இந்த வகை மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *