ஈரான் போர் பதற்றத்தால் எழுந்துள்ள எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்க ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குகிறது இந்தியா

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. அமெரிக்க நிர்வாகம் வழங்கிய சிறப்பு அனுமதியை அடுத்து ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு 50 சதவீதம் வரை அதிகரிக்கும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் சிக்கியுள்ளதால் மாற்று ஏற்பாடாக ரஷ்ய கப்பல்கள் மூலம் எரிபொருளைப் பெற டெல்லி திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்தாலும் இந்தியாவின் எரிசக்தி தேவையில் எவ்வித சமரசமும் செய்யப்போவதில்லை என்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. தற்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியுடன் எரிபொருள் விநியோகத்தை சீராக வைத்திருக்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.