ஈரான் போர் எதிரொலி சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுடன் எகிறுகிறது சிலிண்டர் விலை

ஈரான் போர் எதிரொலி சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுடன் எகிறுகிறது சிலிண்டர் விலை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடல்வழி போக்குவரத்து முடக்கத்தால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வீட்டு உபயோக சிலிண்டர் விலை 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் வணிக ரீதியான சிலிண்டர் கிடைக்காமல் பல உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தட்டுப்பாட்டை தவிர்க்க சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு சரக்கு போக்குவரத்து செலவை அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலையையும் உயர்த்தும் என அஞ்சப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *