இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை! தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி
December 20, 2025

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தோஷகானா-2 ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி இளவரசர் வழங்கிய விலையுயர்ந்த நகைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றத்திற்காக இந்த அதிரடி தீர்ப்பை பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டங்களின் கீழ் இந்த தண்டனையுடன் 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இம்ரான் கான் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.