இந்த ஐந்து வகை புற்றுநோய்கள் உயிருக்கு உலை வைக்கும் மருத்துவர்கள் தரும் அதிரடி எச்சரிக்கை

இந்த ஐந்து வகை புற்றுநோய்கள் உயிருக்கு உலை வைக்கும் மருத்துவர்கள் தரும் அதிரடி எச்சரிக்கை

புற்றுநோயின் தீவிரம் அதன் வகை மற்றும் கண்டறியப்படும் நிலையைப் பொறுத்தே அமைகிறது. கணையம், கல்லீரல், நுரையீரல் மற்றும் மூளை புற்றுநோய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவை ஆரம்பகட்டத்தில் அறிகுறி காட்டாமல் தீவிரமடைவதால், சிகிச்சையளிப்பது கடினமாகிறது மற்றும் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை உயிர்வாழும் வாய்ப்பு வெறும் 8 முதல் 13 சதவீதமே உள்ளது. அதேபோல் சில வகை நுரையீரல் புற்றுநோய்களில் இது 7 சதவீதத்திற்கும் குறைவு. உடல் எடை குறைதல் அல்லது உடலில் கட்டிகள் போன்ற மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக பரிசோதனை செய்வது அவசியம். முறையான பரிசோதனைகளே புற்றுநோயிலிருந்து உயிரைக் காக்க உதவும் சிறந்த வழியாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *