இந்திய ஐடி துறையில் பெரும் சரிவு, சாமானிய முதலீட்டாளர்களின் சேமிப்புக்கு ஆபத்தா

செய்தி பிரிவு : புதன்கிழமை காலை இந்திய ஐடி பங்குகள் சந்தையில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தன, இது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்ற முன்னனி நிறுவனங்களின் பங்குகள் மளமளவென சரிந்து வருவதால், தங்கள் பணத்தை இதில் முதலீடு செய்துள்ள நடுத்தர வர்க்கத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். இந்த திடீர் மாற்றம் சாதாரண மக்களின் எதிர்கால சேமிப்பை பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க சந்தையின் வீழ்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. விப்ரோ மற்றும் எச்சிஎல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் 6 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளன. ஏஐ தொழில்நுட்பம் ஐடி துறையின் வேலைவாய்ப்புகளை பறிக்குமோ என்ற பயம் தற்போது சாமானிய மக்களிடையே பரவி வருகிறது, இது பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.