அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல், இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா இளம் படை

செய்தி பிரிவு : இளையோர் உலகக்கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி இதுவரை தோல்வியே சந்திக்காமல் இருந்தாலும், தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் கேப்டன் ஆயுஷ் மாத்ரே ஆகியோரின் பார்ம் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அபிக்யான் குண்டுவின் பேட்டிங் மீதே உள்ளது. அவரது சிறப்பான ஆட்டம் இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பலத்தை நிரூபித்துள்ளதால், இந்திய அணிக்கு இது சவாலான போட்டியாக அமையும். இலங்கை அணியிடம் ஒரு தோல்வியைத் தழுவினாலும், ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. மதியம் 1 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு. முக்கிய வீரர்கள் ஃபார்முக்கு வருவது இந்திய அணியின் வெற்றிக்கு மிக அவசியமாகும்.