இந்தியப் பொருட்கள் மீதான கூடுதல் வரியை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப் ஆனால் மீண்டும் எச்சரிக்கை
February 9, 2026

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவீத கூடுதல் வரியை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். இந்த வரி குறைப்பு நடவடிக்கையை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிப்படுத்திய நிலையில், இரு நாடுகளும் இதுதொடர்பான கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. இதனால் வர்த்தக ரீதியாக இந்தியாவுக்குப் பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.
இருப்பினும், இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் மீண்டும் 25 சதவீத அபராத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். நிபந்தனைகளை மீறினால் வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.