ஆந்திராவில் அதிசயம்! வளரும் நந்தி சிலை; கலியுக முடிவில் உயிருடன் எழுமா

ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோயில், அதன் தொன்மை மற்றும் அமானுஷ்யத்திற்க்காகப் பிரபலமானது. விஜயநகரப் பேரரசின் சங்கம வம்சத்தைச் சேர்ந்த ஹரிஹர புக்கா ராயரால் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், நந்தியின் சிலை தொடர்ந்து வளர்ந்து வருவதாக நம்பப்படுகிறது. மக்கள் மட்டுமல்ல, விஞ்ஞானிகளும் கூட, இந்த நந்தி சிலை ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் ஒரு அங்குலம் வளர்கிறது என்று கூறுகின்றனர்.
நந்தி சிலை இதே வேகத்தில் வளர்ந்து கொண்டே இருந்தால், கோயிலின் தூண்களை அகற்ற வேண்டியிருக்கும். கலியுகத்தின் முடிவில், இந்த பிரம்மாண்டமான நந்தி சிலை உயிருடன் எழுந்து உலகிற்கு ஒரு பேரழிவைக் கொண்டு வரும் என்று பக்தர்கள் மத்தியில் ஒரு வலுவான நம்பிக்கை உள்ளது. மேலும், மகரிஷி அகஸ்தியரின் சாபத்தின் காரணமாக, இந்தக் கோயிலைச் சுற்றி காகங்கள் ஒருபோதும் காணப்படுவதில்லை என்பது இதன் மற்றொரு வியக்கத்தக்க அம்சமாகும்.