அரிஜித் சிங் பாஜகவில் இணைகிறாரா? அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்புத் தகவல்
February 2, 2026

திரையுலகில் பின்னணி பாடுவதை நிறுத்துவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அரிஜித் சிங், தற்போது பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பாஜக தலைவர்கள் திலீப் கோஷ், கௌரிசங்கர் கோஷ் மற்றும் ருத்ரனில் கோஷ் ஆகியோர் கூறுகையில், கட்சித் தலைமையிடமிருந்து தங்களுக்கு இது தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அதே சமயம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ரச்சனா பானர்ஜி கூறுகையில், தேர்தலுக்கு முன்பாக இது போன்ற வதந்திகள் பரவுவது வழக்கம் என்றார். இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த சிபிஎம் தலைவர் ஷத்ரூப் கோஷ், கற்பனையான விஷயங்களுக்குப் பதிலளிக்க முடியாது எனக்கூறினார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.