அரசு ஊழியர்களுக்கு ஹோலி பரிசு 60 சதவீதமாக உயர்கிறது அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. டிசம்பர் 2025-க்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களின் அடிப்படையில் இந்த 2 சதவீத உயர்வு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே ஊழியர்களின் வங்கி கணக்கில் கூடுதல் தொகை வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உயர்வினால் ஒரு லட்ச ரூபாய் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டாவது ஊதியக்கமிஷன் குறித்த எதிர்பார்ப்புகள் நிலவும் சூழலில் ஏழாவது ஊதியக்கமிஷனின் கீழ் அறிவிக்கப்படும் இந்த முக்கிய உயர்வு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.