அமெரிக்க எண்ணெய் துறையில் முகேஷ் அம்பானி காலடி எடுத்து வைப்பதாக அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க எண்ணெய் துறையில் முகேஷ் அம்பானி காலடி எடுத்து வைப்பதாக அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரவுன்ஸ்வில் பகுதியில் 300 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பிரம்மாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் கட்டப்படும் இந்த முதல் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உருவாக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் உலக எரிசக்தி சந்தையில் அமெரிக்கா மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், இந்த மெகா திட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் டிரம்ப் இடையேயான நீண்டகால வணிக உறவு இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்தத் திட்டம் அமெரிக்காவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ரீதியான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *