அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி பேட்கள் வழங்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி பேட்கள் வழங்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாணவிகளின் மாதவிடாய் கால சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில், நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் இலவச சானிட்டரி பேட்களை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, அரசு மற்றும் தனியார் என அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த நடைமுறையை கட்டாயமாக்கியுள்ளது.

மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிகளை பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 2024-ல் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *