வெளிநாட்டு சொத்து விவரங்களை வெளியிட மத்திய அரசு வழங்கும் மெகா வாய்ப்பு
February 1, 2026

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 பட்ஜெட்டில் சிறு வரி செலுத்துவோருக்காக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி வெளிநாடுகளில் உள்ள வருமானம் மற்றும் சொத்து விவரங்களை முறையாகத் தெரிவிக்க 6 மாத கால அவகாசம் வழங்கப்படும். தவறுதலாக விவரங்களை மறைத்தவர்கள் அல்லது வரி செலுத்தியும் சொத்து விவரங்களை அறிவிக்காதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் வரையிலான வெளிநாட்டு வருமானம் மற்றும் 5 கோடி ரூபாய் வரையிலான சொத்துக்களை வெளிப்படுத்த முடியும். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த தகவல்களை சமர்ப்பிப்பதன் மூலம் வரி செலுத்துவோர் சட்ட சிக்கல்களில் இருந்து விடுபடலாம். வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும் சிறு முதலீட்டாளர்களுக்கு உதவவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.