விஜய்க்கு ஆபத்தா? ‘ஸ்லீப்பர் செல்’ என ஆதவ் அர்ஜுனா மீது மைத்துனர் பகீர் குற்றச்சாட்டு
March 13, 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் புள்ளியான ஆதவ் அர்ஜுனா, திமுகவின் ‘ஸ்லீப்பர் செல்’ என அவரது மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் வளர்ச்சியைத் தடுக்கவும், கூட்டணிகளை முறிக்கவும் ஆதவ் சதி செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் துயர சம்பவத்திற்கு பின்னணியில் ஆதவ் இருப்பதாகக் கூறிய மார்ட்டின், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். கூடவே இருந்து குழிபறிக்கும் சக்திகளை அடையாளம் காணத் தவறினால் விஜய்யின் வெற்றிக் கனவு பாதியிலேயே முடங்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.