யு19 உலகக் கோப்பையில் இன்று இந்தியா பாகிஸ்தான் பலப்பரீட்சை ஆசிய கோப்பை தோல்விக்கு பழிதீர்க்குமா டீம் இந்தியா

யு19 உலகக் கோப்பையில் இன்று இந்தியா பாகிஸ்தான் பலப்பரீட்சை ஆசிய கோப்பை தோல்விக்கு பழிதீர்க்குமா டீம் இந்தியா

யு19 உலகக் கோப்பையின் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இன்று பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. ஜிம்பாப்வேயின் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும் இந்த விறுவிறுப்பான போட்டி இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது. பாகிஸ்தான் அணிக்கு இது வாழ்வா சாவா போராட்டமாக அமைந்துள்ள நிலையில், தோல்வியே சந்திக்காத இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் களம் காண்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பழிவாங்க இந்திய இளம்படைக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். மதியம் 12:30 மணிக்கு டாஸ் போடப்படும் நிலையில், இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ-ஹாட்ஸ்டார் தளங்களில் நேரலையாகக் காணலாம். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இந்த மெகா மோதலின் மீது திரும்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *