மோடி பதவி விலக நேரிடும் என அமெரிக்க ரகசியங்களை வெளியிடுவேன் என்று சுப்ரமணியன் சுவாமி அதிரடி எச்சரிக்கை
March 10, 2026

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுடன் ரகசிய சமரசம் செய்து கொண்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கண்டு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமக்குத் தெரிந்த அமெரிக்க வட்டாரங்கள் வழங்கிய தகவல்கள் வெளியானால், பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சுவாமி எச்சரித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.