கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நேர்ந்த கோரத் தீ விபத்தில் தூக்கத்திலேயே கருகி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்

கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நேர்ந்த கோரத் தீ விபத்தில் தூக்கத்திலேயே கருகி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி கன்னிவாக்கத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பார்த்திபன், அவரது மனைவி ஜெயசித்ரா மற்றும் இரண்டரை வயது மகள் ஜெயஸ்ரீ ஆகிய மூவர் உடல் கருகி உயிரிழந்தனர். நேற்று இரவு தூங்கச் சென்ற இவர்கள், அதிகாலையில் வீடு தீப்பற்றி எரிந்ததில் தப்பிக்க முடியாமல் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து உடல்களை மீட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *