மோடி டிரம்பின் அடிமையாகிவிட்டாரா என மல்லிகார்ஜுன கார்கே அதிரடி கேள்வி
March 9, 2026

மத்திய அரசு அமெரிக்க அழுத்தத்திற்குப் பணிந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகாவின் கலபுர்கியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவின் இறையாண்மை வாஷிங்டனிடம் அடகு வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். எண்ணெய் இறக்குமதிக்கு டிரம்ப் விதித்த காலக்கெடுவை நாட்டின் அவமதிப்பு என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சுதந்திரத்திற்காக காங்கிரஸ் தலைவர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்த கார்கே, தற்போது நாடு மீண்டும் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிமையாவதாக வருத்தம் தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் தலையீடு மற்றும் சர்வதேச விதிமீறல்கள் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இதற்கு மோடியின் மௌனமே காரணம் என்றும் அவர் சாடினார்.