சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் உச்சக்கட்ட அரசியல் மோதல்

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் உச்சக்கட்ட அரசியல் மோதல்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவியிலிருந்து நீக்கக் கோரி காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், சுமார் 118 எம்.பி.க்களின் ஆதரவுடன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் 94(சி) பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் குறித்து சுமார் 10 மணி நேரம் விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை மூன்று முறை மட்டுமே சபாநாயகருக்கு எதிராக இத்தகைய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்தன. இந்த விவாதத்தின் போது ஓம் பிர்லா அவையை நடத்த முடியாது என்றாலும், ஒரு உறுப்பினராக வாக்களிக்க அவருக்கு உரிமை உண்டு. இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்களது எம்.பி.க்களுக்கு த்ரீ-லைன் விப் உத்தரவை பிறப்பித்துள்ளதால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *