மோடியை விமர்சித்து மீம்ஸ் அல்லது கார்ட்டூன் பகிர்ந்தால் சிக்கல் ஏற்படலாம் எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி அல்லது அரசின் கொள்கைகளை விமர்சித்து மீம்ஸ் மற்றும் கார்ட்டூன்களைப் பகிர்வது தற்போது பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69ஏ பிரிவைப் பயன்படுத்தி, சாதனை அளவிலான பதிவுகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யா மற்றும் ஊடகவியலாளர்களின் பதிவுகளும் இந்தத் தணிக்கைக்குத் தப்பவில்லை.
மெட்டா தரவுகளின்படி 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இத்தகைய பதிவுகளை நீக்கும் நடவடிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஒரு ‘மறைமுக தணிக்கை’ என நிபுணர்கள் கருதுகின்றனர். அரசியல் விமர்சனங்கள் மற்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நையாண்டிப் படங்களை முடக்கும் அரசின் இந்த நடவடிக்கை, கருத்து சுதந்திரம் குறித்த புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. சட்ட சிக்கல்களைத் தவிர்க்க சமூக ஊடக நிறுவனங்களும் இந்த உத்தரவுகளை உடனடியாகச் செயல்படுத்துகின்றன.