மாதம் $60$ ஆயிரம் சம்பளம்; கணவரிடம் ஜீவனாம்சம் கேட்ட பேராசிரியை மனைவி! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

மாதம் $60$ ஆயிரம் சம்பளம்; கணவரிடம் ஜீவனாம்சம் கேட்ட பேராசிரியை மனைவி! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

தனது கணவரிடம் ஜீவனாம்சம் (Menance) கோரிய மனைவிக்கு உச்ச நீதிமன்றம் (Supreme Court) நிவாரணம் வழங்க மறுத்துள்ளது. கணவருக்கு இணையான பதவியில் மனைவி பணிபுரிகிறார், எனவே அவர் தன்னைக் கவனித்துக் கொள்ள முடியும் என்று நீதிமன்றம் கூறியது.

நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்தது. கணவரும் மனைவியும் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பதவியில் உள்ளனர். மனைவி மாதத்திற்கு சுமார் $60,000$ ரூபாய் சம்பாதிக்கிறார், கணவர் சுமார் $1$ லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். இருவரின் பதவி சமமாக இருப்பதால், நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *