உத்தரப்பிரதேசத்தில் சாமியார்களை தாக்கிய இளைஞர்கள்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!
December 14, 2025

உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூரில் இரண்டு சாமியார்களை இளைஞர்கள் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுமியை கடத்த முயன்றதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியதாலேயே இந்தத் தாக்குதல் நடந்தது. இதனால் கோபமடைந்த இளைஞர்கள் அவர்களை துரத்திச் சென்று கடுமையாக தாக்கினர்.
தாக்குதலின்போது, இளைஞர்கள் சாமியார்களை அனுமான் சாலிசா மற்றும் காயத்ரி மந்திரத்தை ஓதும்படி கட்டாயப்படுத்தினர். இந்த தாக்குதலில் ஒரு சாமியார் கால்வாயில் விழுந்தார். சம்பவம் குறித்து ஜவுன்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு நபர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.