மருத்துவர்கள் பொறியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சி
December 28, 2025

பாகிஸ்தானில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 5,000 மருத்துவர்கள், 11,000 பொறியாளர்கள் மற்றும் 13,000 கணக்காளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஷாபாஸ் ஷெரீப் ஆட்சியில் நிலவும் இந்த பாரிய அறிவுத்திறன் வெளியேற்றம் (Brain Drain) நாட்டின் எதிர்காலத்தை இருளில் தள்ளியுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நாட்டின் ராணுவத் தளபதி முனீர் இதை ஒரு நேர்மறையான விஷயமாகக் கூறினாலும், கள யதார்த்தம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. திறமையான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பாகிஸ்தானின் பொருளாதார மற்றும் நிர்வாகக் கட்டமைப்பைச் சிதைத்து வருவதாகக் கூறப்படுகிறது.