மியான்மரில் மீண்டும் மலருமா ஜனநாயகம் தேர்தல் தேதிகள் வெளியீடு
December 28, 2025

அண்டை நாடான மியான்மரில் நிலவி வரும் ராணுவ ஆட்சிக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. நீண்ட கால போராட்டங்களுக்குப் பிறகு இந்தத் தேர்தல் உண்மையான ஜனநாயகத்தை மீட்டெடுக்குமா அல்லது வெறும் சடங்காக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் அமைதி மற்றும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய மைல்கல்லாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத் தேர்தல் ஜனவரி 11 அன்றும் மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஜனவரி 25 அன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரின் அரசியல் மாற்றத்தை உற்று நோக்கும் உலக நாடுகள் இந்தத் தேர்தலை மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றன.