மது, மாது மற்றும் ஊழல்! 1971 போரில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள்
December 17, 2025

1971 டிசம்பர் 16 அன்று 93,000 வீரர்களுடன் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்தது. இந்தத் தோல்வி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஹமூதூர் ரஹ்மான் ஆணையத்தின் அறிக்கை, பாகிஸ்தான் ராணுவத்தின் ஒழுக்கச் சீர்கேட்டை அம்பலப்படுத்தியது. உயர் அதிகாரிகளின் மது மற்றும் பெண் மோகமே அந்த நாட்டின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
நாடே இக்கட்டான நிலையில் இருந்தபோதும் யாஹ்யா கான் மதுபோதையில் மூழ்கியிருந்தார். அதேபோல், தளபதி நியாசியின் ஊழல் மற்றும் ஒழுக்கமற்ற செயல்பாடுகளால் ராணுவக் கட்டுக்கோப்பு குலைந்தது. அதிகார மட்டத்தில் இருந்தவர்களின் இத்தகைய முறையற்ற வாழ்க்கையே பாகிஸ்தானை வரலாற்றுத் தோல்விக்கு இட்டுச் சென்றது.