சத்தமில்லாத போன் கால்கள் மூலம் நடக்கும் அதிர்ச்சி தரும் சைபர் மோசடி
December 17, 2025

அந்நிய எண்களில் இருந்து வரும் ‘சைலண்ட் கால்கள்’ குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய அழைப்புகளை ஏற்கும் போது மறுமுனையில் அமைதி நிலவினால், அது உங்கள் எண் செயல்பாட்டில் உள்ளதா என்பதைக் கண்டறிய மோசடி கும்பல் செய்யும் தந்திரமாகும். தெரியாத எண்களுக்கு மீண்டும் அழைப்பதைத் தவிர்க்க வேண்டும்; இல்லையெனில் உங்கள் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளது.
பாதுகாப்பாக இருக்க ‘சஞ்சார் சாதி’ (Sanchar Saathi) இணையதளத்தில் உள்ள ‘சக்சு’ (Chakshu) வசதி மூலம் இத்தகைய அழைப்புகளைப் புகாரளிக்கலாம். சைபர் குற்றவாளிகள் உங்களைப் பின்தொடர்வதைத் தவிர்க்க இதுவே சிறந்த வழி. முன்பின் தெரியாத எண்களில் இருந்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் குறித்து விழிப்புணர்வுடன் செயல்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.