மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி மத்திய அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி மத்திய அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் 113 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதிலின்படி, மொத்தம் உள்ள 750 இடங்களில் 183 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 70 பேர் மட்டுமே பணியில் உள்ளதால் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்தக் காலியிடங்களை விரைந்து நிரப்பத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. தகுதியான நபர்களைக் கொண்டு இந்த இடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *