வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் நேர்ந்த சோகம் பக்தர் உயிரிழந்ததால் பரபரப்பு
March 9, 2026

கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்த பொற்கொல்லர் ஹரிதாஸ், நேற்று இரவு வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது முதல் மலையிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை நண்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீட்டு கீழே கொண்டு வந்தனர். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
தகவலறிந்து வந்த ஆலாந்துறை போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பு ஆண்டில் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது பக்தர்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.