மதம் மாறினாலும் சாதி மாறாது திருமணத்திற்குப் பிறகும் ஒருவரின் பிறப்பு அடையாளமே செல்லும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதம் மாறினாலும் சாதி மாறாது திருமணத்திற்குப் பிறகும் ஒருவரின் பிறப்பு அடையாளமே செல்லும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதம் மாறுவதாலோ அல்லது திருமணம் செய்து கொள்வதாலோ ஒருவருடைய பிறப்பு வழிவந்த சாதி அடையாளம் ஒருபோதும் மாறாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. மதம் என்பது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் மாறக்கூடியது ஆனால் ஒருவரின் சாதி என்பது வாழ்நாள் முழுவதும் மாறாத ஒன்றாகவே இருக்கும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த ஒரு கிரிமினல் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. ஒரு பட்டியல் இனப் பெண் பிற சமூகத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்தாலும் அவருக்குரிய சாதி ரீதியான சட்டப் பாதுகாப்பு தொடரும் என்று நீதிபதிகள் விளக்கமளித்தனர். இதன் மூலம் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்துவது தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பிக்க திருமணத்தை ஒரு காரணமாகக் காட்ட முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *