போலி குங்குமத்தால் கூந்தல் மற்றும் சருமத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது
December 31, 2025

திருமணமான பெண்களுக்கு குங்குமம் ஒரு புனிதமான அடையாளம் என்றாலும் சந்தையில் கிடைக்கும் போலி குங்குமங்கள் பெரும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. செயற்கை நிறங்கள் மற்றும் ஈயம் போன்ற ரசாயனங்கள் கலந்த இந்த போலி குங்குமம் முடி உதிர்தல் மற்றும் தோல் அலர்ஜியை உண்டாக்கக்கூடும். எனவே பாதுகாப்பிற்காக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை மட்டுமே பயன்படுத்துவது அவசியம்.
அசல் குங்குமத்தை அதன் தன்மையை வைத்து எளிதாகக் கண்டறியலாம். சிறிதளவு குங்குமத்தை உள்ளங்கையில் தேய்த்து ஊதினால் அது காற்றில் பறந்துவிட்டால் அது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அசல் குங்குமம் ஆகும். மாறாக கையில் ஒட்டிக்கொண்டு ஈயம் போல படிந்திருந்தால் அது ரசாயனம் கலந்த போலி குங்குமம் என்பதை உணர வேண்டும்.