பெங்களூர் பிஜி விடுதிகளில் அதிரடி உணவுக் கட்டுப்பாடு மற்றும் தோசைக்கு தடை

ஈரான் மற்றும் இஸ்ரேல் போரினால் ஏற்பட்டுள்ள வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு பெங்களூரு பிஜி விடுதிகளை நிலைகுலையச் செய்துள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் தங்கியுள்ள விடுதிகளில் சிலிண்டரை சேமிக்க தோசை, பூரி மற்றும் சப்பாத்தி போன்ற அதிக எரிவாயு தேவைப்படும் உணவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக இந்த உணவுகளுக்குப் பதிலாக அரிசி சார்ந்த எளிய உணவுகள் மட்டுமே இனி பட்டியலில் இடம் பெறும்.
பெங்களூரு பிஜி உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் முடிவின்படி, வார நாட்களில் இனி இரண்டு வேளை மட்டுமே உணவு வழங்கப்படும். எரிவாயு பயன்பாட்டைக் குறைக்க மின்சார சமையல் சாதனங்களைப் பயன்படுத்தவும், குறைந்த நேரத்தில் தயாராகும் உணவுகளை வழங்கவும் உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திடீர் மாற்றத்தினால் நகரில் தங்கியுள்ள லட்சக்கணக்கான குடியிருப்பாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.