புழல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட ஐடி இளம்பெண் மர்ம மரணம்

புழல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட ஐடி இளம்பெண் மர்ம மரணம்

சென்னையை அடுத்த ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஆஷா கீர்த்தி கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் மாயமான நிலையில் புழல் ஏரியின் பின்புறம் சடலமாக மீட்கப்பட்டார். மூன்று நாட்களாகத் தேடப்பட்டு வந்த 26 வயது இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாதவரம் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் கிரைம் உதவியுடன் அவரது செல்போன் சிக்னல் மற்றும் கடைசி அழைப்புகளை ஆய்வு செய்து மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *