நள்ளிரவில் உலகக்கோப்பையுடன் அனுமன் கோயிலில் வழிபாடு நடத்திய சூர்யகுமார் கம்பீர் மற்றும் ஜெய் ஷா

நள்ளிரவில் உலகக்கோப்பையுடன் அனுமன் கோயிலில் வழிபாடு நடத்திய சூர்யகுமார் கம்பீர் மற்றும் ஜெய் ஷா

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. வெற்றியைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் நள்ளிரவில் அகமதாபாத் அனுமன் கோயிலுக்குச் சென்று உலகக்கோப்பையுடன் சிறப்பு வழிபாடு நடத்தினர். இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த தரிசனம் அமைந்தது.

சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற முதல் அணி மற்றும் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்த முதல் அணி என இந்தியா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 256 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி இந்திய பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 159 ரன்களுக்கு சுருண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணி வெல்லும் மூன்றாவது ஐசிசி கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *