புல்லட் ரயில் திட்டத்தில் மகாராஷ்டிரா சாதனை பால்கரில் மலைக்குடைவு சுரங்கப்பாதை பணிகள் வெற்றி

புல்லட் ரயில் திட்டத்தில் மகாராஷ்டிரா சாதனை பால்கரில் மலைக்குடைவு சுரங்கப்பாதை பணிகள் வெற்றி

மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தில் பால்கர் மாவட்டத்தில் மகாராஷ்டிராவின் முதல் மலைக்குடைவு சுரங்கப்பாதை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. விரார் மற்றும் போய்சர் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த 1.5 கி.மீ நீள சுரங்கப்பாதை, நவீன தொழில்நுட்பத்துடன் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசின் தாமதங்களால் இத்திட்டம் இரண்டரை ஆண்டுகள் தடையை சந்தித்தாலும், தற்போது பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மொத்தம் 508 கி.மீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் 8 மலைக்குடைவு சுரங்கப்பாதைகள் அமைய உள்ளன. இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதுடன், சாலைப் போக்குவரத்தை விட 95% கார்பன் வெளியேற்றம் குறையும். மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயில்களால் ஏற்படும் சத்தத்தைக் குறைக்க பிரத்யேக தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *