புத்தாண்டு வங்கி விதிகளில் அதிரடி மாற்றம் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படுமா

ரிசர்வ் வங்கி 2026 ஜனவரி 1 முதல் வங்கி அமைப்பை பாதுகாப்பானதாக மாற்ற புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகள் ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பணப்பரிமாற்றம் இல்லாத கணக்குகள், 12 மாதங்களுக்கும் மேலாக செயல்படாத கணக்குகள் மற்றும் நீண்ட கால பூஜ்ய இருப்பு கணக்குகள் ஆகியவற்றை நிரந்தரமாக மூட ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
உங்கள் வங்கி கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர உடனடியாக ஏதேனும் ஒரு சிறிய பணப்பரிமாற்றத்தை மேற்கொள்வது அவசியம். மேலும், உங்கள் வங்கி கிளையை அணுகி கேஒய்சி விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், புத்தாண்டின் தொடக்கத்தில் வங்கிச் சேவைகளைப் பெறுவதில் நீங்கள் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.