புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிரடி மாற்றம் அதிகாலை 5 மணி வரை கிளப் மற்றும் உணவகங்கள் திறக்க அனுமதி

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் விடிய விடிய களைகட்ட உள்ளது. டிசம்பர் 31 இரவு உணவகங்கள், பார்கள் மற்றும் பப்கள் ஜனவரி 1 அதிகாலை 5 மணி வரை திறந்திருக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக நிரந்தர அரசாணையை வெளியிட்டுள்ளது. இனி வரும் காலங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் தனித்தனியாக அனுமதி பெறத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தளர்வுகள் சில முக்கிய நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளன. மூடிய அரங்கிற்குள் மட்டுமே இந்த நேர நீட்டிப்பு பொருந்தும், திறந்தவெளி மைதானங்களுக்கு இது பொருந்தாது. ஒலி மாசு குறித்த நீதிமன்ற விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும். அசம்பாவிதங்களைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.