புதன்கிழமை விமான சேவைகள் பாதிக்கப்படுமா வட இந்தியாவில் நீடிக்கும் பனிமூட்டம்

புதன்கிழமை விமான சேவைகள் பாதிக்கப்படுமா வட இந்தியாவில் நீடிக்கும் பனிமூட்டம்

வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பகுதியை அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் நிலவும் மோசமான தெரிவுநிலை காரணமாக ஏற்கனவே பத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

புதன்கிழமை மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது நேர மாற்றம் செய்யப்படலாம் என இண்டிகோ நிறுவனம் எச்சரித்துள்ளது. பனிமூட்டம் காரணமாக தெரிவுநிலை அபாயகரமாக குறைந்துள்ளதால், பயணிகள் விமான நிலையத்திற்கு கிளம்பும் முன் தங்களது விமான நேரத்தை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *