நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்ததன் பின்னணி
March 13, 2026

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஒரு சாமானியனும் உழைப்பால் உயரிய நிலையை அடைய முடியும் என்ற ஜனநாயகச் சூழல் அதிமுகவில் மட்டுமே இருப்பதாக அவர் புகழாரம் சூட்டினார். இது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து எடுத்த கூட்டு முடிவு என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தூக்குத் தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் தேவை என வலியுறுத்திய அவர், திமுக அரசுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார். மேடைப் பேச்சால் கவரக்கூடிய இவரின் வருகை, குறிப்பாகக் காவிரி டெல்டா பகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பலப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.