தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா விஜய் மத்திய அமைச்சர் எல் முருகன் கொடுத்த அதிரடி பதில்
March 11, 2026

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக டெல்லி பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன், விஜய் கூட்டணியில் இணைகிறாரா என்ற கேள்விக்கு “எல்லாரும் வருகிறார்கள்” என பதிலளித்தார். அமைச்சரின் இந்த சூசகமான பதில் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், இந்த புதிய கூட்டணி மாற்றங்கள் தேர்தல் களத்தில் கடும் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.