திமுக மாநாட்டிற்கு சென்ற தொண்டர்களுக்கு நேர்ந்த சோகம் மற்றும் தஞ்சாவூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து

திருச்சி சிறுகனூரில் நடைபெறும் திமுக மாநில நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்க நாகப்பட்டினத்திலிருந்து 20-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்று கொண்டிருந்தனர். தஞ்சாவூர் அருகே விளார் புறவழிச்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பலத்த காயமடைந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டிற்கு செல்லும் வழியில் நடந்த இந்த விபத்து குறித்து தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.