நிறம் மாறிய விஷ நீர் பாட்டில்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
March 10, 2026

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. ரசாயனம் கலந்த இந்த நீர் நிறம் மாறியும் துர்நாற்றத்துடனும் காணப்படுவதால், அதைப் பயன்படுத்தும் மக்களுக்குத் தோல் நோய் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மாசுபட்ட தண்ணீரை பாட்டில்களில் அடைத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் முறையிட்டனர். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். புகாரைப் பெற்ற நிர்வாகம், இது குறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.